மாநில பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும் தலைமைச் செயலாளருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக காவல்துறைக்கு கொள்கை வழிகாட்டுதல்களை உருவாக்க மாநில பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரை, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறைக்கு இணையான திறமை கொண்டது, என்று பெயரெடுத்தத் தமிழக காவல்துறையின் செயல்பாடுகள், கடந்த 6 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், ஒருசில காவல்துறை அதிகாரிகளால் சீரழிந்து நிற்கிறது.
ஒரு போலீஸ் அதிகாரியை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவிக்குப் பொறுப்பு அதிகாரியாக இரு வருடங்கள் நியமித்து, பிறகு அவர் ஓய்வுபெறும் நேரத்தில் இரு வருடங்கள் பணி நீட்டிப்பு அளித்து, தேர்தல் முறைகேடுகளுக்கும், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள் போடவும் மட்டுமே டி.ஜி.பி.க்களை பயன்படுத்தும் கேடுகெட்ட நிர்வாகத்தை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பண வினியோகம் செய்த விவகாரத்தில், தேர்தல் ஆணையமே உத்தரவிட்டும் இதுநாள் வரை அமைச்சர்கள் மீதோ, முதல்-அமைச்சர் மீதோ வழக்குப் பதிவு செய்ய முடியாத ஒரு தலைமை, தமிழக காவல்துறைக்குக் கிடைத்திருப்பது கவலைக்குரியது என்றால், இன்றைய பத்திரிகை ஒன்றில் போலீசுக்கு வாக்கி டாக்கி வாங்க நடந்த டெண்டரில் 88 கோடி ரூபாய் முறைகேடு என்று வெளிவந்துள்ள செய்தி மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இது ஒருபுறமிருக்க, டி.ஜி.பி.யே உளவுத்துறைக்கும் பொறுப்பு டி.ஜி.பி.யாக இருக்கிறார். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைக் கையாளுவதில் தோல்வியடையும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் குறித்து, ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளால் டி.ஜி.பி.யிடம் கூறிட முடியவில்லை. இப்படியொரு வரலாறு காணாத சீரழிவைத் தமிழக காவல்துறை சந்தித்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, எண்ணற்ற நேர்மையான டி.ஜி.பி.க்கள் இருந்தும் திறமையற்ற தலைமையின் கீழ் தமிழக காவல்துறை இன்றைக்கு நிலைகுலைந்து நிற்கிறது.
ஆகவே, காவல்துறை நிர்வாகத்தின் சீரழிவை தடுத்து நிறுத்த, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-ன் கீழ் அமைக்கப்படவேண்டிய, மாநில பாதுகாப்பு ஆணையம் இப்போது மிகவும் அவசியமாகிறது.
இந்த ஆணையத்தின் அறிக்கை ஆண்டுக்கு ஒருமுறை சட்டமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதால், தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் பற்றிய ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி வகுக்கமுடியும். ஆகவே, நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்ததுபோல், தமிழக காவல்துறைக்கு கொள்கை வழிகாட்டுதல்களை உருவாக்க, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலான மாநில பாதுகாப்பு ஆணையத்தை தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story