தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 3-ந் தேதி தர்ணா போராட்டம் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி, தேரடி தெருவில் உள்ள போக்குவரத்து துறை பணியாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில தலைவர் கு.பால்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநில பொதுச்செயலாளர் பழனிபாரதி முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் முத்துக்குமரன், எஸ்.காமராஜ், கோதண்டம், ஜி.வி.ராஜா, முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில தலைவர் கு.பால்பாண்டியன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். கடை மூடப்பட்டதால் வேலையின்றி இருக்கும் பணியாளர்களை கூட்டுறவுத்துறை மட்டுமன்றி அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களில் கல்வித்தகுதி, பணிமூப்பு அடிப்படையில் நிரந்தர பணி அமர்த்த வேண்டும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் மாவட்ட மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என அனைத்து பணி இடங்களுக்கும் சங்கத்தை அழைத்து சுழற்சி முறை இடமாறுதல் கொள்கையை உருவாக்க வேண்டும்.
பண மதிப்பிழப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையில் அப்பாவி பணியாளர்களை பழிவாங்குதல் செய்யக்கூடாது என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி தமிழகம் முழுவதும் 20 மையங்களில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story