ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிய உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் மனு விசாரணை 10-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை,
ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை ஐகோர்ட்டு 10-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
கடலூரைச் சேர்ந்த வக்கீல் ஏ.கே.வேலன், சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. தமிழக கவர்னர் கூட அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலவரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படவேண்டும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரம் அனைத்தையும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறைத்து விட்டது. எனவே, ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஏ.கே.வேலன் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதேபோன்று ஒரு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளதாக அரசு வக்கீல் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Tags :
Next Story