21 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம்:கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு


21 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம்:கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு
x
தினத்தந்தி 6 Oct 2017 8:55 PM IST (Updated: 6 Oct 2017 8:55 PM IST)
t-max-icont-min-icon

21 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் கூடுதல் இயக்குநராக சீதா லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

பட்டுப்புழு வளர்ச்சித்துறை இயக்குனராக வெங்கட பிரியா நியமனம்.

வணிகவரித்துறை இணையாக சிவராக நியமனம். சுகாதார முறை திட்ட இயக்குநரானார் உமா.

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.

அருங்காட்சியாக இயக்குராக கவிதா ராமு நியமனம். ஆவணக்காப்பக  இயக்குநராக அன்பழகன் நியமனம்.

சேகோசர்வ் மேலான் இயக்குனராக கஜலட்சுமி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

தாட்கோ மேலான் இயக்குராக என்.சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் அலுவலக துணை செயலாளராக இருந்த பொன்ராஜ் ஆலிவர், மறுவாழ்வு துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாக துறை கூடுதல் ஆணையர் ராஜாராமன், மருத்துவ சேவை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story