மின் பெட்டியில் பறவை மோதியதால் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பாதிப்பு
மின்சார இணைப்பு பெட்டியில் பறவை மோதியதால் கோயம்பேடு-அசோக்நகர் இடையே 1 மணி நேரம் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை,
நேரு பூங்கா- விமானநிலையம், கோயம்பேடு- ஆலந்தூர் உள்பட சில பகுதிகளில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்துவருகிறது. மெட்ரோ ரெயிலுக்கு தேவையான மின்சாரம் வழங்குவதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் மின் இணைப்பு பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
கோயம்பேடு-அசோக்நகர் மார்க்கத்தில் உள்ள அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் நேற்று மாலை 3 மணி அளவில் பெரிய பறவை ஒன்று மோதியது. இதனால் உயர்த்தப்பட்ட ரெயில் பாதைக்கு செல்லும் மின்சாரம் தடைப்பட்டது.
இதன்காரணமாக கோயம்பேடு-அசோக்நகர் இடையே ஒரு ரெயில் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் மற்றொரு பாதையில் தொடர்ந்து ரெயில் இயக்கப்பட்டது. உடனடியாக பொறியாளர்கள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
1 மணி நேரத்தில், பழுதான மின் இணைப்பு பெட்டிக்கு பதிலாக புதிய மின் இணைப்பு பெட்டியை பொருத்தி மின் வினியோகத்தை சரிசெய்தனர். இதனால் இந்தப் பாதையில் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

Related Tags :
Next Story