சினிமா டிக்கெட் கட்டணத்தை 25% வரை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி


சினிமா டிக்கெட் கட்டணத்தை 25% வரை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி
x
தினத்தந்தி 7 Oct 2017 2:53 PM IST (Updated: 7 Oct 2017 2:53 PM IST)
t-max-icont-min-icon

சினிமா டிக்கெட் கட்டணத்தை 25% வரை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

கேளிக்கை வரி 10 சதவீதம் அமல்படுத்தியதற்கு  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சூழலில், சினிமா கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ.150, குறைந்தபட்சம் ரூ.15 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரூ.120-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.150-ஆகவும், ரூ.95-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.118.80-ஆகவும், ரூ.85ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.106.30-ஆகவும், ரூ.10ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.15-ஆகவும் நிர்ணயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  உயர்மட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று 25 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விலை உயர்வு திங்கள் கிழமை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணத்தில் கேளிக்கை வரி அடங்கும். ஆனால் உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கு மேலாக 28 சதவீத ஜி.எஸ்.டி வரியை  செலுத்த வேண்டும்.



Next Story