வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு ‘பரோல்’ வழங்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினியை அவரது வக்கீல் புகழேந்தி சந்தித்தார்.
வேலூர்,
ஆண்கள் ஜெயிலில் உள்ள நளினியின் கணவர் முருகனையும் அவர் சந்தித்து பேசினார்.
பின்னர் வெளியே வந்த புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், நளினி தனது மகள் ஹரித்ரா திருமணத்திற்காக ‘பரோல்’ கேட்டு விண்ணப்பித்ததாகவும், ஆனால் நளினிக்கு சென்னையில் சொந்த வீடு இல்லை என்ற காரணத்தை கூறி அவருக்கு ‘பரோல்’ வழங்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். முருகன் தனக்கு ஒரு மாதம் ‘பரோல்’ கேட்டு சிறைத்துறைக்கு மனு அளித்து இருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.

Related Tags :
Next Story