தமிழக அரசுக்கே டெங்கு , எப்படி மக்களை டெங்கு நோயில் இருந்து காக்க முடியும்- டிடிவி தினகரன்
தமிழக அரசுக்கே டெங்கு வந்த பின்னால் எப்படி மக்களை டெங்கு நோயில் இருந்து காக்க முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை
அ.தி.மு.க அம்மா அணியின் துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசுக்கே டெங்கு வந்துவிட்ட பின்னால், அந்த அரசு இனி எப்படி மக்களை டெங்கு நோயில் இருந்து காக்க முடியும். டெங்கு உயிரிழப்புகள் தொடரும் நிலையில் இனி தமிழக அரசை நம்பி பிரயோஜனம் இல்லை. டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தொண்டர்களுக்கு தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொண்டர்கள் ஈடுபட வேண்டும். நோயை கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை,அரசு செயல்படாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story