7 -வது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
7 -வது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல். அதுபோல் மதுபான விலை உயர்வுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
சென்னை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 7-வது ஊதியக்குழு சிபாரிசு மற்றும் அலுவலர் குழு அளித்த பரிந்துரைகள் ஆகியவற்றை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
7-வது ஊதியக்குழு சிபாரிசுகள் மற்றும் அலுவலர் குழு அறிக்கையை அமல்படுத்துவதற்கான காலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எந்த தேதியில் இருந்து அமல்படுத்துவது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் அறிவிக்கப்படும்.
இந்த பரிந்துரையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சம் 20 சதவீதம் வரை சம்பளம் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்வது பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டது.
டெங்குவை கட்டுப்படுத்த ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், விழிப்புணர்வு ஆகியவை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மதுபானங்களின் விலையை உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
பீர் ரகங்களுக்கு ரூ. 10 ரூபாயும். குவார்ட்டர் ஒன்றுக்கு ரூ.12 ரூபாயும் உயர்த்தப்படும்

Related Tags :
Next Story