டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி; கட்சி நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவு
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை,
தமிழகமெல்லாம் ஆட்கொண்டு இருக்கும் டெங்குவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.க.வின் அனைத்து மாவட்டம் சார்பாக நாளை (இன்று) ஒவ்வொரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற பாணியில் நாம் உதவிகள் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டத்திலும் நேரடியாக சென்று உதவி செய்யும் வகையில் திருப்பூர் மற்றும் கோவையில் பிரேமலதா விஜயகாந்த், கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் அவைத்தலைவர் அழகாபுரம், ஆர்.மோகன்ராஜ், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் பொருளாளர் வி.இளங்கோவன், திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், சென்னை மற்றும் திருவள்ளூரிலும் துணை செயலாளர் ப.பார்த்தசாரதி, திருப்பூர் மற்றும் கோவையில் துணை செயலாளர் ஏ.எஸ்.அக்பர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு துணை செயலாளர் எஸ்.சந்திரா, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு கழக உயர்மட்டக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.இளங்கோவன் மற்றும் மற்ற அனைத்து மாவட்டங்களில், மாவட்ட செயலாளர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.