டெங்கு விவகாரத்தில் ஸ்டாலினும், விஜயகாந்தும் அரசியல் செய்யக்கூடாது அமைச்சர் செல்லூர் ராஜூ


டெங்கு விவகாரத்தில் ஸ்டாலினும், விஜயகாந்தும் அரசியல் செய்யக்கூடாது அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 12 Oct 2017 10:51 AM IST (Updated: 12 Oct 2017 10:51 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல்விவகாரத்தில் ஸ்டாலினும், விஜயகாந்தும் அரசியல் செய்யக்கூடாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்து உள்ளார்.

மதுரை

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் ஆளுங்கட்சியை குறைகூறவே ஸ்டாலின் தவறான கருத்துக்களை பேசி வருகிறார்.டெங்கு காய்ச்சலை ஒழிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் 3,500 அரசு ஊழியர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் ஸ்டாலினும், விஜயகாந்தும் அரசியல் செய்யக்கூடாது.

டெங்குவை முழுவதுமாக தடுக்க வேண்டுமெனில் கொசுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story