ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது- விஜயகாந்த்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி உள்ளார்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெங்குவால் பாதிக்கபட்டவர்களை பார்த்து நலம் விசாரித்தார்
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று காலை ஸ்டானில் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு, வழங்கும் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது; ஏனெனில் தமிழகத்தில் மீண்டும் பொதுத்தேர்தல் வரும்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story