காதலனை விரட்டி விட்டு காதலியை கத்தி முனையில் மிரட்டி கற்பழித்த 6 பேர்
சென்னையில் காதலனை மிரட்டி நண்பர்கள் 6 பேர் கத்தி முனையில் இளம்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம்,
செய்யூர் அருகே உள்ள சீக்கானங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வரும் 22 வயது இளம் பெண் பக்கத்தில் உள்ள பவுஞ்சூர் கிராமத்துக்கு வந்தார்.
மாலை நேரத்தில் அவர் ஒதுக்குபுறமான இடத்தில் அதே பகுதியை சேர்ந்த காதலனுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, 2 மோட்டார் சைக்கிளில் 6 வாலிபர்கள் மது போதையில் வந்தனர். அவர்கள் தனிமையில் இருந்து காதல் ஜோடியை மிரட்டினர்.
இதில் இளம் பெண்ணின் காதலனுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கும்பல் இளம்பெண்ணின் காதலனை கத்திமுனையில் மிரட்டி தாக்கினர். அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
பின்னர் இளம் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 6 பேரும் கற்பழித்தனர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர்.
உடனே 6 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து அணைக்கட்டு போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கூவத் தூரை அடுத்த பேட்டை கிராமத்தை சேர்ந்த 3 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story