போக்குவரத்து விதிமுறை மீறல்கள்: 1½ மாதத்தில் 97 ஆயிரத்து 456 பேர் மீது வழக்குப்பதிவு


போக்குவரத்து விதிமுறை மீறல்கள்:  1½ மாதத்தில் 97 ஆயிரத்து 456 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 15 Oct 2017 4:15 AM IST (Updated: 14 Oct 2017 11:56 PM IST)
t-max-icont-min-icon

கடந்த ஒன்றரை மாதத்தில் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட 97 ஆயிரத்து 456 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனத்தை ஓட்டுதல், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்லுதல் உள்பட போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுவோர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

அதன்படி சென்னையில் கடந்த மாதம் 1–ந்தேதி முதல் 30–ந்தேதி வரையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 68 ஆயிரத்து 187 வாகன ஓட்டிகள் மீதும், கடந்த 1–ந்தேதி முதல் 10–ந்தேதி வரையில் 29 ஆயிரத்து 269 வாகன ஓட்டிகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.97 லட்சத்து 45 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story