தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ ரெயில் கூடுதல் சேவை


தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ ரெயில் கூடுதல் சேவை
x
தினத்தந்தி 16 Oct 2017 3:45 AM IST (Updated: 15 Oct 2017 9:37 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களும் இரவு 10 மணிக்கு பதிலாக, கூடுதலாக மேலும் 1 மணிநேரம் அதாவது இரவு 11 மணி வரை ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதேபோல் வரும் 19–ந் தேதி (வியாழக்கிழமை) மற்றும் 20–ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் காலை 6 மணிக்கு பதிலாக காலை 5 மணிக்கே சேவை தொடங்குகிறது. பயணிகள் இந்த கூடுதல் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story