‘முறைகேடுகளோ, விதி மீறல்களோ, அரசியல் குறுக்கீடோ இல்லை’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுப்பு
மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்து உள்ளார்.
சென்னை,
மத்திய நிதிக்குழு மானியத் தொகை விடுவிப்பிலும், திட்டப் பணிகளை செயல்படுத்துவதிலும் முறை கேடுகளோ, விதி மீறல் களோ, அரசியல் குறுக் கீடுகளோ இல்லை என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்து உள்ளார்.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய நிதியாணைய நிதி ஒதுக்கீடு குறித்து தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் அத்தியாவசிய தேவைக் கான மின் கட்டணத்தையும், குடிநீர் கட்டணத்தையும் செலுத்தாமல் மத்திய நிதியாணையம் அளித்துள்ள அடிப்படை மானியத் தொகையை கான்டிராக்டுகள் மற்றும் டெண்டர்களுக்கு முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது என்று காழ்ப்புணர்ச்சியுடன் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கின்றேன்.
மத்திய அரசோ அல்லது மாநில அரசோ ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கும் போது, அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னர் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும். அவ்வாறு வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தான் அத்திட்டம் செயலாக்கப்படும் என்பது நடைமுறை.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 24-ந் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில்(எண் 108) 2015-16 முதல் 2019-20 வரையிலான ஆண்டுகளுக்கு மத்திய நிதியாணையத்தின் நிதி ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் அடிப்படையில், 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டுகளுக்கு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு அடிப்படை மானியமாகவும், செயல்திறன் மானியமாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில்(2017-18) 14-வது மத்திய நிதிக்குழு மானிய பரிந்துரையின் அடிப்படையில், முதல் தவணைத் தொகையாக மாநகராட்சிகளுக்கு ரூ.252.79 கோடியும், நகராட்சிகளுக்கு ரூ.195.91 கோடியும் மாநில அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சியின் பங்குத் தொகையாகவும் மற்றும் குடிநீர் வினியோக மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணத்தை செலுத்தவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டணத்தை செலுத்தவும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை மேற்கொள்ளவும், புதிய சாலைகள் அமைத்தல் மற்றும் சாலைகள் சீரமைத்தல், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதான மேம்பாட்டுப் பணிகள், சுடுகாடு மற்றும் இடுகாடுகள் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், அரசாணையின் மூலம் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படியே அரசால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையில் 2017-18 ஆம் ஆண்டில் தமிழ்நாடு நகர்ப்புறச் சாலைகள் உட்கட்டமைப்பு திட்டப் பணிகளை மேற்கொள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில், தோராயமாக 18 சதவீதம் அளவில் 14-வது மத்திய நிதிக்குழு மானியத் தொகையிலிருந்து எடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்காக சாலைப் பணிகளை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜெயலலிதாவின் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டே பகிர்ந்தளிக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே மத்திய நிதிக்குழு மானியத் தொகை விடுவிப்பிலும், திட்டப் பணிகளை செயல்படுத்துவதிலும் முறைகேடுகளோ, விதி மீறல்களோ, அரசியல் குறுக்கீடோ எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்து, அபத்தமான அறிக்கை வெளியிட்டு அவதுாறுகளைப் பரப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story