தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை,
நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழக மக்களும் அதே உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். அதையொட்டி, தமிழக மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:- இந்திய திருநாட்டை பாதுகாக்கின்ற பணியில் கண்துஞ்சாது நம்மை காக்கின்ற நம் ராணுவ சகோதரர்களை நினைவில் கொண்டு, ஒளிபரப்பும் இந்நாள் முதல் தொழில் வளர வேண்டும். விவசாயிகள் வாழ்வில் ஒளிதீபம் ஏற்ற வேண்டும். மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிய வேண்டும். பாரதம் தழைக்க வேண்டும். தேன் தமிழ்போல் பாரத மக்கள் வாழ்வு இனிக்கட்டும், செழிக்கட்டும் என அன்னை ஆதிபராசக்தியை வேண்டி அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜயகாந்த்
அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- இந்தத் தீபாவளி நன்னாளில் அனைவரது வாழ்விலும் ஒளி, இன்பம், மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் என்ற அவாவினைத் தெரிவித்து, எனதருமைத் தமிழக மக்கள் அனைவருக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா சார்பில் உளமார்ந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:- வரும் காலங்களில் தங்களின் வாழ்வில் செழிப்பும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்பட்டு மக்கள் அனைவரும் வளமான வாழ்வு வாழ, ஒளிமயமான எதிர்காலம் அமைந்திட, அனைத்து மக்களும் இன்பத்தையும், நிம்மதியையும் பெற்று தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தே.மு.தி.க. சார்பில் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- தீபஒளித் திருநாளின் அடையாளமே ஒளியும், அதனால் ஏற்படும் வெளிச்சம் மற்றும் மகிழ்ச்சியும் தான். தீபத்தின் ஒளியைப் போலவே உழவர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் வெளிச்சமும், மகிழ்ச்சியும் கிடைக்கக்கூடிய ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை தீபஒளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:- இன்று தேசத்தில் நிலவும் பேதங்களும், பிணக்குகளும் நீங்க வேண்டும். அனைவரையும் அரவணைக்கும் அன்பும், அணுகுமுறையும் மலர வேண்டும். திட்டங்களின் பயன்கள் விரைவாக மக்களைச் சேர வேண்டும். ஒட்டுமொத்த மக்கள் மகிழ்வோடும், இனிதோடும் வாழ வேண்டும். அதற்கு இறைவன் துணை நிற்க வேண்டும். இதுவே என் இனிய தமிழ் மக்களுக்கு த.மா.கா. சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
தமிழிசை
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:- தமிழகத்தில் அத்தனை தீங்குகளும் அழிந்து, தீங்குகளே இல்லாத நன்மை கிடைக்கும் தீபாவளியாக, டெங்கு இல்லாத தீபாவளியாக இந்த தீபாவளி அமைய வேண்டும். மக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை பகிர்ந்துண்டு, உறவுகளை மேம்படுத்தி, பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து, ஏழை, எளியோருக்கு முடிந்த உதவிகளை செய்து பரவசமடைய வேண்டும். அனைவருக்கும் தமிழக பா.ஜ.க. சார்பில் தீபஒளி திருநாளில் எனது நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- தமிழ்நாடு உள்பட உலகில் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் தீபஒளி திருநாள் கொண்டாடப்படும் நிலையில், அத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குதூகலமாகக் கொண்டாடும் தீபஒளித் திருநாளில், என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும், அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்.ஆர்.தனபாலன்
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:- எல்லோரும் எல்லாமும் பெறவும், இல்லாமை இல்லாமல் போகவும் அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவச போக்குவரத்து, இலவச மின்சாரம் கிடைத்திடவும் இத்தீபதிருநாள் வழி விடட்டும், அனைவரும் புத்தாடை அணிந்து புதுப்பொலிவுடன் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்.
சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன்:- அனைவரது வாழ்விலும் வளம் நிறைந்து வாழ்வாங்குவாழ தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை என் சார்பிலும், சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏ.சி.சண்முகம்
இதேபோல், புதியநீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், திருவேற்காடு இந்து சமய வளர்ச்சிப் பேரவை பொதுச்செயலாளர் மு.ராமச்சந்திரனார், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி ஆகியோரும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story