நிலவேம்பை நான் எதிர்க்கவில்லை நடிகர் கமலஹாசன் விளக்கம்


நிலவேம்பை நான் எதிர்க்கவில்லை நடிகர் கமலஹாசன் விளக்கம்
x
தினத்தந்தி 19 Oct 2017 7:45 PM IST (Updated: 19 Oct 2017 7:45 PM IST)
t-max-icont-min-icon

நிலவேம்பை நான் எதிர்க்கவில்லை எனநடிகர் கமலஹாசன் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக நடிகர் கமலஹாசன் அறிக்கை மூலம் கூறியிருப்பதாவது:

நிலவேம்பு குடிநீரை நம் நற்பனி இயக்கத்தினர் விநியோகிக்க வேண்டாம் என்று தான் கூறினேன். நிலவேம்புக்கு கமல் எதிர்ப்பு என்று செய்தி பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை. மருந்தை அளவில்லாமல் கொடுப்பதை தவிர்க்கவே டுவிட்டரில் கருத்து வெளியிட்டேன். மருத்துவர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை விநியோகிக்க வேண்டாம் என கூறினேன்.  சித்தா, அலோபதி என்ற தனிச்சார்பு எதுவும் எனக்கு இல்லை. மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story