மெர்சல் படத்தை மீண்டும் சென்சார் செய்ய வேண்டாம் - நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை
ஒரு முறை சென்சார் செய்யப்பட்ட மெர்சல் படத்தை மீண்டும் சென்சார் செய்ய வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது.
மத்திய அரசால் மகத்தான திட்டங்கள் என்று பாராட்டப்பெற்று, விமா்சனத்திற்குள்ளான திட்டங்களான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றிற்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் மொ்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி. இல.கணேசன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவா்கள், மத்திய அரசை விமா்சிக்கும் வகையிலான உண்மைக்குப் புறம்பான வசனங்களை மொ்சல் படத்திலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் ஒரு முறை சென்சார் செய்யப்பட்ட மெர்சல் படத்தை மீண்டும் சென்சார் செய்ய வேண்டாம் - நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
விஜயின் மெர்சல் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டாம். மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனங்களை அடக்க நினைக்காதீர்கள். கருத்துக்கள் பேசப்பட்டால் தான் இந்தியா ஒளிரும். விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். விமர்சிப்போரை மவுனமாக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story