ஓ.பன்னீர்செல்வத்துக்கு அளிக்கப்படும் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு நீட்டிப்பு மத்திய அரசு அனுமதி

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அளிக்கப்படும் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு நீட்டிப்பு மத்திய அரசு அனுமதி
x
தினத்தந்தி 21 Oct 2017 12:00 AM IST (Updated: 21 Oct 2017 12:00 AM IST)
t-max-icont-min-icon

சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு, பொதுவாக உயிருக்கு அச்சுறுதல் உள்ள அரசியல் செல்வாக்குள்ள மிகமுக்கிய நபர்களுக்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன.

சென்னை,

சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு, பொதுவாக உயிருக்கு அச்சுறுதல் உள்ள அரசியல் செல்வாக்குள்ள மிகமுக்கிய நபர்களுக்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன.

அந்த வகையில் எக்ஸ்(ரிஸ்க்), ஒய், ஒய் பிளஸ், இசட்(மிக அதிக ரிஸ்க்), இசட் பிளஸ் அல்லது இசட் ஸ்பெ‌ஷல்(மிகமிக அதிக ரிஸ்க்) ஆகிய பிரிவுகள் உள்ளன.

எந்தெந்த வகையான பாதுகாப்புக்கு ஒருவர் உட்படுகிறாரோ, அதற்கு ஏற்ற வகையில் பி.எஸ்.ஓ. என்று அழைக்கப்படும் மெய்ப்பாதுகாவலரின் எண்ணிக்கை இருக்கும். அதுபோல தானியங்கி துப்பாக்கி போன்ற ஆயுதங்களும் அனுமதிக்கப்படும்.

இதில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி அளிக்கப்படும் பாதுகாப்பு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது சூழ்நிலைகளின் மாற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்யப்படுகிறது.

சமீபத்தில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. இதுபற்றிய குறிப்புகளை மத்திய அரசு கேட்டுப்பெற்றது. அவருக்கு இதே பாதுகாப்பை வழங்கலாம் என்று சம்பந்தப்பட்ட துறையில் இருந்து அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே அவருக்கு இதே பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் மத்திய அரசிடம் இதுபோன்ற பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு மத்திய பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்த ஆய்வை இனிமேல் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

Next Story