ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு


ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
x
தினத்தந்தி 21 Oct 2017 5:30 AM IST (Updated: 21 Oct 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (நவம்பர்) வெளியாக வாய்ப்பு உள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாக ஓட்டுகள் பதிவாகின. அங்கு ஏன் குறைவாக ஓட்டுகள் பதிவானது என்பது பற்றிய ஆய்வை இந்திய தேர்தல் கமிஷன் நடத்த தொடங்கி உள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான சுருக்க திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு, இதுபோன்ற வாக்குச்சாவடிகள் அடங்கிய பகுதிகளில் வசிக் கும் வாக்காளர்கள் இடம் மாறிவிட்டார்களா? அல்லது அங்கு வசித்துக்கொண்டிருந்தாலும், தேர்தலில் ஓட்டு போட வரவில்லையா? என்பது பற்றிய ஆய்வை நடத்துகின்றனர்.

சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதுபற்றியும் ஆய்வு நடத்தப்படுவதாக இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. டிசம்பரில் அங்கு தேர்தல் நடத்தப்படும். அதற்கான அறிவிப்பை நவம்பர் மாதம் தேர்தல் கமிஷன் அறிவிக்கக்கூடும். அப்போது சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. குஜராத் மாநில தேர்தல் நடக்கும்போது, ஆர்.கே.நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கக்கூடும்” என்றார்.

Next Story