பேச்சு, படைப்பு சுதந்திரத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க ஸ்டாலின்


பேச்சு, படைப்பு சுதந்திரத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 21 Oct 2017 3:13 PM IST (Updated: 21 Oct 2017 3:12 PM IST)
t-max-icont-min-icon

பேச்சு, படைப்பு சுதந்திரத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், மத்திய அரசை விமர்சித்து சில வசனங்கள்  படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக காங்கிரஸ்  துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், மெர்சல் படத்தின் பெயரை குறிப்பிடாமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ பேச்சு, படைப்பு சுதந்திரத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும். ஜனநாயக கொள்கைகளுக்கு முரணாக பாஜக செயல்படுகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story