மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதற்கு உள்நோக்கம் கற்பிக்க கூடாது; அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதற்கு உள்நோக்கம் கற்பிக்க கூடாது என சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசும்பொழுது, கொசுக்களை ஒழித்து விட்டால் டெங்குவை முற்றிலும் ஒழித்து விடலாம். டெங்கு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
தொடர்ந்து அவர், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதற்கு உள்நோக்கம் கற்பிக்க கூடாது. மத்திய அரசு உதவியில்லாமல் எல்லா திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. மாநிலத்திற்கு தேவையான நிதியை பெறுவதற்கு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபொழுது மத்திய அரசிடம் உரிமைகளை பறிகொடுத்தனர். அ.தி.மு.க. அரசு சிறப்புடன் செயல்படுவதை தி.மு.க.வால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story