போயஸ் இல்லம் ஜெ.தீபாவின் மனு குறித்து 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
போயஸ் இல்லம் ஜெ.தீபாவின் மனு குறித்து 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை, நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தீபா தாக்கல் செய்த மனுவை, நான்கு வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
போயஸ் கார்டன் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்து முடிவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் , தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது தீபாவின் மனுவை பரிசீலித்து முடிவெடுப்பதாக அரசு தெரிவித்தது. இதை தொடர்ந்து ஐகோர்ட் , தீபா கொடுத்த கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

Related Tags :
Next Story