அவினாசி அருகே 6-ம் வகுப்பு மாணவி கழுத்து அறுப்பு


அவினாசி அருகே 6-ம் வகுப்பு மாணவி கழுத்து அறுப்பு
x

அவினாசி அருகே 6-ம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி  நம்பியாம் பாளையத்தை சேர்ந்தவர் முருகன். மில் தொழிலாளி. இவரது மகள் கஸ்தூரி (11). இவர் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள்  வந்தனர்.

அவர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்த  கத்தியால் மாணவி கஸ்தூரியின் கழுத்தை பின் பக்கம் அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் மாணவி ரத்தம் சொட்ட சொட்ட கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் மாணவியை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி கழுத்தை அறுத்து விட்டு மாயமான 2 பேரையும் தேடி வருகிறார்கள்.



Next Story