சென்னையில் மீண்டும் விட்டு விட்டு தொடரும் மழை: தேர்வுகள் ஒத்திவைப்பு


சென்னையில் மீண்டும் விட்டு விட்டு தொடரும் மழை:  தேர்வுகள் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 4 Nov 2017 8:12 AM IST (Updated: 4 Nov 2017 8:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மீண்டும் விட்டு விட்டு கனமழை தொடர்வதால் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதையடுத்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். 

சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தரமணியில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் சிறப்பு பள்ளியில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேவேளையில், அண்ணா பல்கலைகழகத்தில் திட்டமிட்டபடி இன்று அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Next Story