சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்


சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 5 Nov 2017 1:43 PM IST (Updated: 5 Nov 2017 1:43 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் துணைத்தலைவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.  தென் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரில் கனமழை பெய்யும்.  சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும்.  வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு.  3 நாட்களுக்கு பின் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story