சென்னையில் எழும்பூர், கிண்டி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், அடையாறு, கிண்டி, திருவல்லிக்கேணி மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
இதனால் வெள்ள நீர் புகுந்து பல இடங்களில் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது. பொதுமக்கள் பணிக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டது.
சென்னையில் நேற்று மழை சற்று குறைந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், அடையாறு, கிண்டி, திருவல்லிக்கேணி மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் கனமழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story