தினத்தந்தி பவள விழாவில் திரண்ட அரசியல் பிரமுகர்கள்- திரை உலகினர்
தினத்தந்தி பவள விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், திரையுலக நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
சென்னை
இந்தியாவின் ‘நம்பர் 1’ தமிழ் நாளிதழ் என்ற சிறப்பை பெற்ற ‘தினத்தந்தி’ பவள விழா ஆண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
அதை கொண்டாடும் விதமாக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று (திங்கட் கிழமை) ‘தினத்தந்தி’யின் பவள விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். காலை 9-10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார்.சென்னை விமானநிலையம் வந்திறங்கிய பிரதமரை தமிழிசை, எச்.ராஜா,இல. கணேசன். எம்.பி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அங்கு பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்கு வரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் பூங்கொத்து வரவேற்றார்கள்.
பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு வந்தார், ஐஎன்எஸ் தளத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.30 மணி அளவில் ‘தினத்தந்தி’ பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்ட பத்துக்கு காரில் சென்றார். அவரை, ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தினத்தந்தி நாளிதழ் புகைப்பட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
விழா, மேடையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேடையில் உள்ளவர்களுக்கு ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்கள். அதன் பின்னர், சி.பால சுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்று பேசினார்.
அவரை தொடர்ந்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அவரை தொடர்ந்து, ‘தினத்தந்தி’ பவள விழா சிறப்பு மலரை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். விழா மலரை தொடர்ந்து விருதுகளையும் அவர் வழங்கினார்.
விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், திரையுலக நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் வந்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை சுதா சேஷய்யன் தொகுத்து வழங்கினார்.
விழாவில் பங்கேற்றவர்கள் விவரம்:-
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டை யன், தங்கமணி, கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, டி.ஜெயக் குமார், பா.பென்ஜமின், ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதா கிருஷ்ணன், ஆர்.பி. உதய குமார், மா.பா. பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன், ராஜலட்சுமி, சரோஜா, நிலோபர், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை.
அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி மாவட்ட செயலாளர் பாலகங்கா, எம்.பி.க்கள் எஸ்.ஆர்.விஜயகுமார், டாக்டர் ஜெயவர்தன், எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன்.
தி.மு.க. முதன்மை செய லாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை. முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி. தனுஷ் கோடி ஆதித்தன், மாநில செய்தி தொடர்பாளர் கோபண்ணா, வசந்த குமார் எம்.எல்.ஏ., நாசே ராமச்சந்திரன், நாசே. ராஜேஷ், மாவட்ட தலை வர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், ரூபி மனோகரன்,
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜிகே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்பாளர் மு.ஜெயராமன்,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, நிர்வாகிகள் திருப்பூர் துரைசாமி, ஜீவன், கழக குமார், செங்குட்டுவன்,
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், வன்னிஅரசு, பாவரசு, உஞ்சை அரசன், செல்லத்துரை,
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், பொதுச் செயலாளர் எச்.ராஜா, வானதி சீனி வாசன் சி.பி.ராதாகிருஷ் ணன், இல.கணேசன் எம்.பி., துணைத் தலைவர்கள் எம்.என்.ராஜா, பி.டி.அரச குமார், சக்கரவர்த்தி, கேசவ விநாயகம், வக்கீல் அணி மாநில செயலாளர் தங்கமணி, நிர்வாகிகள் ஜெய்சங்கர், கிருஷ்ணகுமார், டால்பின் ஸ்ரீதர், தனஞ்செயன், கரு.நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர், செம்பாக்கம் வேதசுப்பிரமணியம்,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராய ணன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், பிரபு, சூர்யா, கார்த்தி, தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, விக்ரம் பிரபு, விஜயகுமார், அருண்பாண்டியன், பார்த்திபன், எஸ்.வி.சேகர், வின்சென்ட் அசோகன், ரமேஷ் கண்ணா, சின்னி ஜெயந்த், நடிகைகள் சரோஜாதேவி, கஸ்தூரி, ரேகா, ஜெயசித்ரா, கவிஞர்கள் வைரமுத்து, சினேகன், சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், அபிராமி ராமநாதன், டைரக்டர்கள் பி.வாசு, சந்திரசேகரன், கேயார், நாஞ்சில் பி.சி.அன்பழகன், சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஆர்.பி. சவுத்ரி சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா.
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, கட்ரா குரூப் தலைவர் ரமேஷ் வாங்கல், இந்து ராம், தினமலர் இணை ஆசிரியர் ஆதிமூலம், எவர்வின் பள்ளிகளின் தாளாளர் புருஷோத்தமன், இயக்குனர் முரளிகிருஷ்ணா, மதுரை ஆதீனம்,
ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வா, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.க்கள் அலெக்சாண்டர், முத்துக்கருப்பன், சேகர், பாலச்சந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன், கிரிக்கெட் வீரர் ஹேமந்பதானி, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி ராபர்ட் பர்கிட், ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் . மதுரை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், சென்னை வாழ்நாடார் சங்க தலைவர் சின்னமணி நாடார், நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் சபாபதி நாடார், தங்கமுத்து நாடார், இந்திய நாடார் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் .

Related Tags :
Next Story