ரோந்து பணியில் ஈடுபட்டபோது 35 அடி உயர பாலத்தில் இருந்து ஜீப் விழுந்து போலீஸ்காரர் பலி
ரோந்து பணியில் ஈடுபட்டபோது 35 அடி உயர பாலத்தில் இருந்து ஜீப் கீழே விழுந்ததில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
தர்மபுரி,
ரோந்து பணியில் ஈடுபட்டபோது 35 அடி உயர பாலத்தில் இருந்து ஜீப் கீழே விழுந்ததில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.
தர்மபுரி மாவட்டம் அரூர்-சேலம் நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் ஜீப்பில் தினமும் 2 போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் கடத்தூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தர்மபுரி ஆயுதப்படை போலீஸ்காரர் ராமகிருஷ்ணன் (வயது 33) ஆகிய 2 பேரும் ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் நள்ளிரவு அரூரில் இருந்து அ.பள்ளிப்பட்டி வரை ஜீப்பில் சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டு இருந்தனர். ஜீப்பை போலீஸ்காரர் ராமகிருஷ்ணன் ஓட்டிச் சென்றார்.
அப்போது பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் வாணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்றபோது திடீரென பாலத்தின் தடுப்பு சுவரில் ஜீப் மோதியது. இதில் சுவரை உடைத்துக் கொண்டு 35 அடி உயர பாலத்தில் இருந்து ஜீப் ஆற்றுக்குள் பாய்ந்தது.
ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஜீப் நொறுங்கி, இடிபாடுகளில் சிக்கி ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த ரவிச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ராமகிருஷ்ணன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். கிரேன் வரவழைக்கப்பட்டு போலீஸ் ஜீப் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story