எஸ்.ஐ-க்கு குத்துவிட்ட காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
எஸ்.ஐக்கு குத்துவிட்ட காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல்நிலையத்தில் எஸ்எஸ்ஐ மற்றும் காவல் ஆய்வாளர் இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டது. அப்போது தாமதமாக வந்ததாகக் கூறி எஸ்.எஸ்.ஐ பார்த்திபன் மூக்கில், காவல் ஆய்வாளர் ராம ஆண்டவர் குத்துவிட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் இருவருக்கும் காயம் ஏற்பட்டவே இருவரும் மத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகளே காவல்நிலையத்தில் மோதிக்கொண்ட சம்பவம் மத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மத்தூரில் எஸ்.எஸ்.ஐக்கு குத்துவிட்ட காவல் ஆய்வாளர் ராம ஆண்டவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அம்மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.
Related Tags :
Next Story