காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ வாதம்
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதி படுநாசமாகி பாலைவனமாகும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ வாதாடினார்.
சென்னை,

ஹைட்ரோ கார்பன் திட்டம்
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், நெடுவாசல் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதியரசர் நம்பியார், சுற்றுச்சூழல் நிபுணர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கில் தனது பதிலை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. ஆனால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆகியோர் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ‘தலைமைச் செயலாளர் இந்த வழக்கில் பதில் அளிக்க வேண்டிய தேவை இல்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்‘ என்று தமிழக அரசு வக்கீல் வாதாடினார்.
உண்மையை மறைக்க முயற்சி
நீதியரசர் நம்பியார் வைகோவிடம், ‘தலைமைச் செயலாளரை ஒரு தரப்பாகச் சேர்த்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளரையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களில் ஒருவர் பதில் அளித்தால் போதுமானது’ என்றார்.
அதற்கு வைகோ, ‘தலைமைச் செயலாளர் அவசியம் பதில் அளிக்க வேண்டும். சுற்றுச்சூழல் செயலாளரை இந்த வழக்கில் இருந்து நீக்குவதற்கு மனு தாக்கல் செய்கிறேன்‘ என்று கூறினார்.
மேலும் அவர் வாதாடும்போது, கூறியதாவது; ஓ.என்.ஜி.சி. தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் சுற்றுச்சூழல் துறையில் இருந்து சான்றிதழ் வாங்க வேண்டிய தேவையில்லை. இந்தப் பிரச்சினைக்கும் ஓ.என்.ஜி.சி.க்கும் எந்த தொடர்பும் இல்லை. மத்திய அரசும், ஜெம் லேபரட்டரி நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தம்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜெம் லேபரட்டரி தாக்கல் செய்த மனுவில், ‘ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அளித்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில்தான் மத்திய அரசு நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இருப்பதை உறுதி செய்தது. அதன்பின்பு தான் தங்கள் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டது‘ என்று தெரிவித்துள்ளது. மிகப்பெரிய உண்மையை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தற்போது மறைக்க முயற்சிக்கிறது?.
பாலைவனமாகும்
ஹைட்ரோ கார்பன் எரிவாயு என்பது, மீத்தேன் எரிவாயு, பாறைப்படிம எரிவாயு (சேல் கேஸ்) உள்ளிட்ட அனைத்து எரிவாயுக்களையும் உள்ளடக்கியது ஆகும். இதனால், மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான பணம் குவியும். ஆனால், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதி படுநாசமாகி பாலைவனமாகும்.
இது, தமிழகத்தை பாதிக்கக்கூடிய கடுமையான பிரச்சினை. எனவே, இதனை எதிர்த்து விவசாயிகள் காவிரி டெல்டா பகுதிகளில் பல மாதங்களாகப் போராடி வருகின்றனர்’ இவ்வாறு வைகோ தெரிவித்தார். இதன்பின்பு, வழக்கு விசாரணை அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story