கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழ் கற்கிறார்
கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழ் மொழியை கற்று வருகிறார். தமிழ் மொழி பழமைவாய்ந்த அழகான மொழி என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை

தமிழகத்தின் கவர்னராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்ததும், மராட்டிய மாநில கவர்னராக உள்ள வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், தமிழக அரசியலில் பல்வேறு அசாதாரண சூழல்கள் நிகழ்ந்தன.
இதனால் முழுநேர கவர்னரை நியமிக்கவேண்டும் என எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து தமிழகத்தின் முழுநேர கவர்னராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார்.
தமிழக மக்களோடு அவர் நேரடி தகவல் தொடர்பினை மேற்கொள்ளும் வகையில் தமிழ் மொழியை கற்று வருகிறார்.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம் 6-ந்தேதி பதவி ஏற்றார். மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மத்திய இந்தியாவின் பழமையான ஆங்கில நாளிதழான ‘தி ஹிட்டாவாடா’வின் நிர்வாக ஆசிரியராகவும் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த கல்வியாளர், சமூக ஆர்வலர், பல நிறுவனங்களை உருவாக்கியவர், சொற்பொழிவாளர் மற்றும் தேசியவாத சிந்தனையாளர்.
பன்வாரிலால் புரோகித் ஆங்கிலம், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் நன்கு புலமை பெற்றவர். அவருடைய நுட்ப திறன் மற்றும் தமிழ் மீது உள்ள மிகுந்த பற்று ஆகியவற்றின் காரணமாக, தமிழ் மொழியை கற்றுக்கொள்வதில் அளவுகடந்த ஆர்வம் செலுத்தி வருகிறார். இதையடுத்து தமிழ் ஆசிரியரிடம் அவர் தமிழ் மொழியை கற்று வருகிறார்.
இதுகுறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறுகையில், “தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மற்றும் ஒரு அழகான மொழி. தமிழ் மொழியை கற்பதன் மூலம் மக்களை தொடர்புகொள்வதற்கு உதவிகரமாக இருக்கும்” என்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story