சென்னையில் ஜெயா டி.வி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை


சென்னையில் ஜெயா டி.வி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
x
தினத்தந்தி 9 Nov 2017 7:18 AM IST (Updated: 9 Nov 2017 7:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஜெயா டி.வி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்கட்சி நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் வருமான வரி துறை அதிகாரிகள் இங்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

10 பேர் கொண்ட வருமான வரித்துறை குழு ஜெயா தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.

வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது என ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனையில் வருமானம் பற்றிய முறையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெயா தொலைக்காட்சியுடன் தொடர்புடைய மற்ற இடங்களிலும் சோதனை நடைபெற வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.


Next Story