வருமான வரித்துறை சோதனைக்கு நடுவே தினகரன் நடத்திய கோமாதா பூஜை


வருமான வரித்துறை சோதனைக்கு நடுவே தினகரன்  நடத்திய கோமாதா  பூஜை
x
தினத்தந்தி 9 Nov 2017 11:55 AM IST (Updated: 9 Nov 2017 11:55 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை சோதனை நடந்துக் கொண்டிருந்த நிலையில் தினகரனும் அவர் மனைவியும் கொஞ்சமும் பதற்றமின்றி இந்த கோமாதா பூஜையில் ஈடுபட்டார்.

சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு இன்று அதிகாலை வருமான வரித்துறையினர் சென்றிருந்தபோது, டி.டி.வி.தினகரனும், அவர் குடும்பத்தினரும் கோமாதா பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். வருமான வரி சோதனை நடந்ததால் அந்த ‘கோ’ பூஜையில் சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பேசிய தினகரன் பிறகு அவர்களிடம் அனுமதி கேட்டு 10.30 மணிக்கு கோமாதா பூஜையை நடத்தினார்.

டி.டி.வி.தினகரனும், அவர் மனைவி அனுராதாவும் அந்த பசு மாட்டை சுற்றி வந்து வழிபட்டு வணங்கினார்கள். அந்த மாட்டுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு அந்த பசு மாட்டுக்கு அவர்கள் இருவரும் வாழைப்பழம் சாப்பிட கொடுத்தனர்.

சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் தினகரனும் அவர் மனைவியும் கொஞ்சமும் பதற்றமின்றி இந்த பூஜையில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story