சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்களில் சோதனை ஏன்? வருமான வரித்துறை


சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்களில் சோதனை ஏன்? வருமான வரித்துறை
x
தினத்தந்தி 9 Nov 2017 2:07 PM IST (Updated: 9 Nov 2017 2:06 PM IST)
t-max-icont-min-icon

சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்களில் நடந்து வரும் சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை

இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சசிகலா பெயரில் 4 போலி நிறுவனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை சசிகலா நடத்தி வந்த போலி நிறுவனங்கள்.

இந்த போலி நிறுவனங்கள் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதில் ஜெயா டி.வி.க்கு தொடர்புடையதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story