வருமான வரி சோதனைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கும் தமிழக அரசுக்கு தொடர்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதின் அடிப்படையில் இதுவரை 70 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.மேலும் 218 பொருட் களுக்கு வரி குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க.வுக்கும், நடைபெற்ற வருமான வரி சோதனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வருமானவரித் துறையினருக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் அவர்கள் சோதனையிடுகின் றனர். எனவே இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story