கவர்னருடன், சிங்கப்பூர் தூதரக அதிகாரி சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, சிங்கப்பூர் தூதரக அதிகாரி ராய் கோ நேற்று சந்தித்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, சிங்கப்பூர் தூதரக அதிகாரி ராய் கோ நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-சிங்கப்பூர் இடையிலான நட்பினையும், தொழில் ரீதியான உடன்படிக்கைகளையும் குறிப்பிட்ட ராய் கோ, சிங்கப்பூர் துணை நிறுவனங்களின் பெரும்பங்கு சென்னை மற்றும் தூத்துக்குடி யில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
மேலும், தமிழக பெருநிறுவனங்களும் தங்கள் நாட்டில் செயல்பட்டு வருவதாகவும், இந்த உறவு நிலைத்திருக்க வேண்டும் என்றும், சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்களே என்றும் கூறினார். தமிழ்நாட்டில் கூடுதலாக தொழில் நிறுவனங்கள் தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
அவரிடம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறுகையில், “தொழில்துறையில் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு, மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொழில்வளர்ச்சி மட்டுமின்றி கல்விக்காகவும் சிங்கப்பூர் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. சிங்கப்பூருடன் அனைத்து விதமான உறவுகளையும் விரும்புகிறோம். எல்லாவித ஒத்துழைப்பும் வழங்குவோம்”, என்றார்.
இந்த சந்திப்பின்போது கவர்னர் மாளிகை முதன்மை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, துணை செயலாளர் கே.வி.முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story