பருவமழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை


பருவமழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 11 Nov 2017 10:15 AM IST (Updated: 11 Nov 2017 10:14 AM IST)
t-max-icont-min-icon

பருவமழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 3 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை

தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும் இந்நேரத்தில், மழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.  சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையின் பத்தாவது தளத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுத் துறை செயலாளர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகின்றன. மேலும், வரவிருக்கும் பருவ மழை தொடர்பான பாதிப்புகள், அதற்கு முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மக்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

சமீபத்தில், சென்னையில் விடாமல் பெய்த 8 மணி நேர கனமழைக்கே மாநகரின் முக்கியப் பகுதிகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கின. இது பருவ மழை குறித்த பெரும் அச்சத்தை விதைத்துவிட்டு சென்றிருக்கிறது. இந்நிலையில், நாளை முதல் தமிழக வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story