விரைவில் மழை நிவாரணத்திற்கு மத்திய அரசின் உதவி தமிழகத்திற்கு கிடைக்கும்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி
விரைவில் மழை நிவாரணத்திற்கு மத்திய அரசின் உதவி தமிழகத்திற்கு கிடைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை
தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும் இந்நேரத்தில், மழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையின் பத்தாவது தளத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுத் துறை செயலாளர் கலந்து கொண்டனர்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட கலெக்டர்களும் கலந்து கொண்டனர்.
பேரிடர் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை அகற்றுவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மழை பாதிப்பு குறித்த ஆலோசனைக்கு பின் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழை பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 3 மாதங்களில் பெய்யும் மழை 5 நாளில் பெய்துள்ளது.
அதிக அளவு மழை பெய்தாலும் அரசின் துரித நடவடிக்கையால் உடனடியாக மழை நீர் அகற்றப்பட்டது.
சிறப்பான குடிமராமத்து பணி காரணமாக கூடுதலாக நீர் சேமிக்கப்பட்டுள்ளது; தாழ்வான இடங்களில் மழையால் தேங்கிய நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது. பிரதமர் நேரம் ஒதுக்கி நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார். பருவ மழை முடிந்த பிறகுதான் முழுமையான பாதிப்புகள் குறித்து தெரியவரும். விரைவில் மழை நிவாரணத்திற்கு மத்திய அரசின் உதவி தமிழகத்திற்கு கிடைக்கும்.
உலக அளவில் நகரப்பகுதிகளில் 4 செ.மீ பெய்யும் மழை நீரை வெளியேற்றவே வசதி உள்ளது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறினார்

Related Tags :
Next Story