வீட்டின் சுவர், அடித்தளத்தில் ஆவணங்கள் பதுக்கலா? இளவரசியின் மகள் வீட்டில் அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை
சுவர், அடித்தளத்தில் ஆவணங்கள் எதுவும் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறதா? என்று வருமான வரித்துறை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
சென்னை
இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டின் சுவர், அடித்தளத்தில் ஆவணங்கள் எதுவும் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறதா? என்று வருமான வரித்துறை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இல்லம் உள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா கடந்த மாதம் ஆஸ்பத்திரியில் தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வந்த போது இந்த வீட்டில் தான் தங்கி இருந்தார். அப்போது ஏராளமான சொத்து ஆவனங்கள் பதிவு செய்ததாக கூறப்பட்டது.
இந்த இல்லத்தில் நேற்று 3-வது நாளாக சோதனை நீடித்தது. வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் சுபஸ்ரீ தலைமையில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகலாக விடிய விடிய இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
நேற்று காலை 10.31 மணிக்கு கூடுதல் கமிஷனர் சுபஸ்ரீ, அங்கு வந்தார். அவரைத்தொடர்ந்து மேலும் 2 அதிகாரிகள் காரில் வந்தனர். ஏற்கனவே இரவு முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வந்த 2 அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வரும் வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையை தொடங்கிய முதல் நாளிலேயே கிருஷ்ணபிரியாவின் லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். அதில் அவருடைய மின்னஞ்சல் முகவரி, வங்கி கணக்கில் இருந்து செய்யப்பட்ட பரிமாற்றங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.
அதுமட்டுமில்லாமல், அவருடைய செல்போன் அழைப்புகளை கொண்டும் அதிகாரிகள் சோதனையை தீவிரம் காட்டி வருகின்றனர்.
கிருஷ்ணபிரியாவின் வீட்டின் வெளிச்சுவர் மற்றும் பால்கனி அடித்தளத்திலும் எதுவும் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து நேற்று பகல் 11 மணி அளவில் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணபிரியாவின் சகோதரி ஷகிலாவின் இல்லம், சென்னை தியாகராயநகர் பத்மநாபன் தெருவில் அமைந்துள்ளது. அவருடைய வீட்டிலும் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story