வருமான வரி சோதனை இன்றும் தொடருகிறது


வருமான வரி சோதனை இன்றும் தொடருகிறது
x
தினத்தந்தி 12 Nov 2017 1:32 AM IST (Updated: 12 Nov 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கடந்த 9-ந்தேதி முதல் வருமான வரித்துறை சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கடந்த 9-ந்தேதி முதல் வருமான வரித்துறை சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.

நேற்று 3-வது நாளாக 40 முதல் 50 இடங்களில் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில் முதலீடு தொடர்பான ஆவணங்களும், சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த தகவலின் அடிப்படையில் மேலும் பல ஆவணங்கள் சிக்கும் என்ற முகாந்திரம் இருப்பதால் குறிப்பிட்ட இடங்கள் சிலவற்றை தேர்ந்து எடுத்து இருப்பதாகவும், அதில் 10-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சோதனை தொடருகிறது.

Next Story