கொடநாடு பங்களாவில் 4வது நாளாக வருமான வரி சோதனை தொடருகிறது


கொடநாடு பங்களாவில் 4வது நாளாக வருமான வரி சோதனை தொடருகிறது
x
தினத்தந்தி 12 Nov 2017 9:35 AM IST (Updated: 12 Nov 2017 9:34 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் உள்ள கொடநாடு பங்களாவில் இன்று 4வது நாளாக வருமான வரி சோதனை தொடருகிறது.

நீலகிரி,

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். ஆகிய இடங்களில் கடந்த 9ந்தேதி வருமான வரி சோதனை நடந்தது.

முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் சோதனை நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், கொடநாடு பங்களாவில் இன்று 4வது நாளாக வருமான வரி சோதனை தொடருகிறது. சோதனையின்பொழுது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி எஸ்டேட் மேலாளர் நடராஜிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story