மக்கள் மீது அக்கறை இருந்தால் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, மக்கள் பணியாற்ற வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
மக்கள் மீது அக்கறை இருந்தால் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, மக்கள் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்
நெல்லை,
நெல்லையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்
செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- “3 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படும். தமிழகத்தில் ரூ.300 கோடி செலவில் மேலும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீர் விவசாயம், குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும் அரசு மீது குறை சொல்வதை மட்டுமே திமுக செய்துவருகிறது.
குறை கூறுவோர் கூறிக்கொண்டுதான் இருப்பார்கள்; அதிலும் திமுக அதிகமாக குறை கூறுகிறது. தமிழகத்தில் தடுப்பணைகளை கட்ட அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பலரின் துணையோடு ஆட்சியை கலைக்க நினைத்தால் ஸ்டாலின் கனவு பகல்கனவாகத்தான் இருக்கும். தமிழகத்தில் தடுப்பணைகளை கட்ட அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story