20 இடங்களில் 5-வது நாளாகவும் தொடரும் வருமான வரி சோதனை
சசிகலா உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீடுகளில் கடந்த 9-ம் தேதி தொடங்கிய வருமான வரிசோதனை இன்றும் 5வது நாளாக தொடருகிறது.
சென்னை
சசிகலா உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 187 இடங்களுக்கும் மேல் சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் என தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், ஐந்தாம் நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. 3 நாளில் 167 இடங்களில் சோதனை நடத்தி முடிக்கப்பட்டது. 4-வது நாளான நேற்று 20 இடங்களில் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டது.
தற்போது, கொடநாடு எஸ்டேட்டில் சோதனையும், அதன் மேலாளர் நடராஜனிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது. மேலும், கர்சன் எஸ்டேட்டிலும் தற்போது சோதனை நடைபெறுகிறது.
ஜெயா டிவி அலுவலகத்திலே இரவு நேரத்தில் 2 அதிகாரிகள் தங்கி சோதனை நடத்தினர். பாதுகாப்பு பெட்டகங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கிண்டி ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், தி.நகரில் உள்ள கிருஷ்ண பிரியா வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள விவேக் இல்லம், மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட 5 இடங்களில் இன்றும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நீலகிரியில் உள்ள கிரீன் டீ எஸ்டேட் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நீடிக்கிறது. மொத்தம் 20 இடங்களில் 5-வது நாளாகவும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையை தொடர்கிறார்கள்.

Related Tags :
Next Story