கோவையில் வளர்ச்சி பணிகள் பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு


கோவையில் வளர்ச்சி பணிகள் பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
x
தினத்தந்தி 14 Nov 2017 4:28 PM IST (Updated: 14 Nov 2017 4:28 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் வளர்ச்சி பணிகள் பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்து வருகிறார்.

கோவை,

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள பன்வாரிலால் புரோஹித் கோவையில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் பற்றி இன்று ஆய்வு செய்து வருகிறார்.

அவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

புதுடெல்லி மற்றும் புதுச்சேரியில் ஆளுநராக இருப்பவர்கள் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்கு அங்குள்ள ஆளுங்கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.  இந்நிலையில் கோவையில் ஆளுநர் ஆய்வு பணியில் ஈடுபட்டு உள்ளது தமிழகத்தில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.


Next Story