7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை காவல் ஆணையராக இருந்த அமுல்ராஜ் திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த பெரியய்யா கோவை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பொது விநியோகம் மற்றும் தடுப்புப்பிரிவு ஆணையர் வெங்கட்ராமன், சென்னை காவல் நிர்வாக பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் நிர்வாகப் பிரிவு கண்காணிப்பு ஆணையர் தினகரன், சென்னை காவல் ஸ்தாபன ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜியாக சோனல் வி.மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story