சிவானந்த சரஸ்வதி குருகுலத்தில் குழந்தைகள் தினவிழா டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

சிவானந்த சரஸ்வதி குருகுலத்தில் குழந்தைகள் தினவிழா டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Nov 2017 12:15 AM IST (Updated: 14 Nov 2017 11:21 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி குருகுலத்தில் குழந்தைகள் தின விழா நேற்று மாலை நடைபெற்றது.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி குருகுலத்தில் குழந்தைகள் தின விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவிற்கு பா.ம.க இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், குருகுல நிர்வாகி ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

Next Story