விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கோர்ட்டில் ஆஜராகவில்லை அடுத்த மாதம் 5-ந்தேதி ஆஜராக உத்தரவு
விமான நிலையத்தில் தகாத வார்த்தைகளில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
ஆலந்தூர்,
விமான நிலையத்தில் தகாத வார்த்தைகளில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணை அடுத்த மாதம் 5-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பாலு என்பவரை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கியதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாலுவின் புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி விஜயகாந்த் ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணை ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆலந்தூர் கோர்ட்டில் விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரணை மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் ஆஜரானார்.
ஆனால் விஜயகாந்த் ஆஜராகவில்லை. அவருக்கு உடல்நலம் சரியில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் விஜயகாந்த், ஆலந்தூர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story