தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் வானிலை மைய அதிகாரி தகவல்


தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் வானிலை மைய அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2017 3:45 AM IST (Updated: 15 Nov 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும், கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

இன்று (புதன்கிழமை) முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும், கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்ட குறைந்த அழுத்த தாழ்வுப்பகுதி வட கிழக்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று உள்ளது. இதன் காரணமாக 14-ந் தேதி காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக் குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்து இன்று (புதன்கிழமை) முதல் 18-ந் தேதி வரை 4 நாட்கள் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கடந்த 12-ந் தேதி பெய்த மழை அளவுக்கு 13-ந் தேதி மழை பெய்யவில்லை. 13-ந் தேதி பெய்த அளவுக்கு மழை நேற்று பெய்யவில்லை. இவ்வாறு படிப்படியாக மழையின் அளவு குறைந்து வருகிறது.

இந்த குறைந்த அழுத்த தாழ்வுப்பகுதி நிலத்திற்குள் வந்தால்தான் மழை. ஆனால் அது கடற்கரையையொட்டியே செல்கிறது. இந்த தாழ்வு நிலை மறைந்தால்தான் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படும். அடுத்து 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை.

சென்னையில் இன்று (புதன்கிழமை) வானம் மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Next Story